"கமலா ஹாரிஸ் துணை அதிபர் பதவிக்கான சரியான தேர்வு" முன்னாள் அதிபர் ஒபாமா பாராட்டு
அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் தேர்ந்து எடுக்கப்பட்டது, மிகச் சரியான முடிவு என முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், அமெரிக்காவின் தற்போதைய மற்றும் எதிர்கால பிரச்சனைகளை எதிர்கொள்ள, கமலா ஹாரிஸ் எனும் சரியான கூட்டாளியை ஜோ பிடன் தேர்ந்து எடுத்துள்ளதாக பாராட்டியுள்ளார்.
இதனிடையே, கமலா ஹாரிஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு ஜோ பிடனுடன் சேர்ந்து முதன்முறையாக வாஷிங்டனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய ஜோ பிடன், கமலா ஒரு திறமையான, கடினமான மற்றும் அனுபவமிக்கவர் என குறிப்பிட்டவர், துணை அதிபர் பதவிக்கு அவர் சரியான நபர் எனவும் புகழாரம் சூட்டினார்.
I’ve known Senator @KamalaHarris for a long time. She is more than prepared for the job. She’s spent her career defending our Constitution and fighting for folks who need a fair shake. This is a good day for our country. Now let’s go win this thing. pic.twitter.com/duJhFhWp6g
— Barack Obama (@BarackObama) August 11, 2020
Comments